ராகம் ரஞ்சனி ராகம் ஆதி
பல்லவி
மாங்குயில் கூவிடும் பூங்குடிப் பாணாவிடை
பூங்கமழ் சோலைதனில் ஆங்கவனை கண்டேனடி
அனுபல்லவி
பாங்கமர் பாவையான பர்வதவர்த்தனியைத்
தாங்கி அணைத்த ராமலிங்கேஸ்வரச் சிவனை
சரணம்
எண்ணமெல்லாம் சிவனின் எழிலை நினைக்குதடி
கண்ணுதலான் இதழில் கணிநகை இனிக்குதடி
பெண்ணுக்கிருக்கும் அந்தப் பித்தும் இதுதானோடி
பித்தன் என்றாலும் என்ன பேயன் என்றாலும் என்ன
சித்தம் மயங்குதடி சிவராமேஸ்வரன் அழகில்
நித்தம் அவன் வாசல் நின்று தொழுவேனடி
இத்தரையில் சிவபிரான் இனிய கழல் சேர்வே னோ
No comments:
Post a Comment