Sunday, 2 June 2024

குடமுழுக்காடிய குதூகலம்

 

ராகம் காம்போதி  தாளம் ஆதி 
பல்லவி 
இடபாரூடராய் இவர்ந்து வந்தார் -பூங்குடியில்
 படமாடும்  பாம்பணிந்தே பர்வதவர்த்தனையோடு 
அனுபல்லவி 
குடமுழுக்காடிய குதூகலமு ம் பொங்க 
விடைமீதால் ஏறிப்பாணாவிடை த்தல  வீதியிலே 
சரணம் 
அரோஹரா எனக்கூவி அன்பர் பரவிப்பாட 
புராதனக்கோவில் சிற்பம் புகழ்ந்து ஈசனைப் போற்ற 
சராசரங்கள் அனைத்தும் சாம்பவன் நிழல் நாட 
இராமலிங்கேஸ்வரன் இனிய அருள் தரவே 

மங்கள வாத்தியம் எங்கணும் ஒலிக்க 
பங்கஜக்கண்ணழகி  பர்வதவர்த்தனி மகிழ 
சங்குதவழ் தரங்கம் சாம்பவன் பதம் நாட 
எங்கள் குறை தீர்க்க்க எழுந்தருளிய  சிவன் 
---------------------------------------------------------------------------
பதம் நித்தம் அவன் வாசல் நின்று தொழுதேனடி 
ராகம் ரஞ்சனி ராகம் ஆதி 
பல்லவி 
மாங்குயில் கூவிடும் பூங்குடிப் பாணாவிடை 
பூங்கமழ் சோலைதனில் ஆங்கவனை கண்டேனடி 
அனுபல்லவி 
பாங்கமர் பாவையான பர்வதவர்த்தனியைத் 
தாங்கி  அணைத்த ராமலிங்கேஸ்வரச் சிவனை 
சரணம் 
எண்ணமெல்லாம் சிவனின் எழிலை நினைக்குதடி 
கண்ணுதலான் இதழில் கணிநகை இனிக்குதடி 
பெண்ணுக்கிருக்கும் அந்தப் பித்தும் இதுதானோடி 

பித்தன் என்றாலும் என்ன பேயன் என்றாலும் என்ன 
சித்தம் மயங்குதடி சிவராமேஸ்வரன் அழகில் 
நித்தம் அவன் வாசல் நின்று தொழுவேனடி 
இத்தரையில் சிவபிரான் இனிய கழல் சேர்வே னோ 

No comments:

Post a Comment