Sunday, 2 June 2024

சித்தம் இரங்கிடாயோ சிற்பரனே


ராகம் ஷஹானா   தாளம் ஆதி 

பல்லவி 
சித்தம் இரங்கிடாயோ  சிற்பரனே
அத்தனே  ராமலிங்க அம்பலத்தாண்டவனே  
அனுபல்லவி 
கத்தும் திரை கடல் சூழ் கவின் பூங்குடிப்பதியில் 
வித்தக அருட்கோயில் விளங்கும் பராபரனே 
சரணம் 
வாணாளில்  நின்னருள் வதானாம்புஜம் காண்பேனா 
பாணாவிடை  வாசல் வந்து பக்தியாய் தொழுவேனா 
காணாமல் இருப்பேனா கழலடி மறப்பேனா 
பூணாதி பன்னகங்கள்  பூணும் ராமலிங்கேஸ்வரா

No comments:

Post a Comment