சித்தம் இரங்கிடாயோ சிற்பரனே
ராகம் ஷஹானா தாளம் ஆதி
பல்லவி
சித்தம் இரங்கிடாயோ சிற்பரனே
அத்தனே ராமலிங்க அம்பலத்தாண்டவனே
அனுபல்லவி
கத்தும் திரை கடல் சூழ் கவின் பூங்குடிப்பதியில்
வித்தக அருட்கோயில் விளங்கும் பராபரனே
சரணம்
வாணாளில் நின்னருள் வதானாம்புஜம் காண்பேனா
பாணாவிடை வாசல் வந்து பக்தியாய் தொழுவேனா
காணாமல் இருப்பேனா கழலடி மறப்பேனா
பூணாதி பன்னகங்கள் பூணும் ராமலிங்கேஸ்வரா
-----------------------------------------------------------------------------------------------------------குடமுழுக்காடிய குதூகலம்
ராகம் காம்போதி தாளம் ஆதி
பல்லவி
இடபாரூடராய் இவர்ந்து வந்தார் -பூங்குடியில்
படமாடும் பாம்பணிந்தே பர்வதவர்த்தனையோடு
அனுபல்லவி
குடமுழுக்காடிய குதூகலமு ம் பொங்க
விடைமீதால் ஏறிப்பாணாவிடை த்தல வீதியிலே
சரணம்
அரோஹரா எனக்கூவி அன்பர் பரவிப்பாட
புராதனக்கோவில் சிற்பம் புகழ்ந்து ஈசனைப் போற்ற
சராசரங்கள் அனைத்தும் சாம்பவன் நிழல் நாட
இராமலிங்கேஸ்வரன் இனிய அருள் தரவே
மங்கள வாத்தியம் எங்கணும் ஒலிக்க
பங்கஜக்கண்ணழகி பர்வதவர்த்தனி மகிழ
சங்குதவழ் தரங்கம் சாம்பவன் பதம் நாட
எங்கள் குறை தீர்க்க்க எழுந்தருளிய சிவன்
---------------------------------------------------------------------------
பதம் நித்தம் அவன் வாசல் நின்று தொழுதேனடி
ராகம் ரஞ்சனி ராகம் ஆதி
பல்லவி
மாங்குயில் கூவிடும் பூங்குடிப் பாணாவிடை
பூங்கமழ் சோலைதனில் ஆங்கவனை கண்டேனடி
அனுபல்லவி
பாங்கமர் பாவையான பர்வதவர்த்தனியைத்
தாங்கி அணைத்த ராமலிங்கேஸ்வரச் சிவனை
சரணம்
எண்ணமெல்லாம் சிவனின் எழிலை நினைக்குதடி
கண்ணுதலான் இதழில் கணிநகை இனிக்குதடி
பெண்ணுக்கிருக்கும் அந்தப் பித்தும் இதுதானோடி
பித்தன் என்றாலும் என்ன பேயன் என்றாலும் என்ன
சித்தம் மயங்குதடி சிவராமேஸ்வரன் அழகில்
நித்தம் அவன் வாசல் நின்று தொழுவேனடி
இத்தரையில் சிவபிரான் இனிய கழல் சேர்வே னோ
------------------------------------------------------------------------
பக்தி செய்யும் மருதப்ப பக்தனுக்கருள் செய்தவன்
ராகம் கானடா தளம் ஆதி
பல்லவி
நெக்குருவி நினைப்பாள் நின்மனம் நெகிழும்
திக்குப்புகள் பாணாவிடைத்தெய்வமு ன் உளம் மகிழும்
அனுபல்லவி
பக்தி செய்யும்மாறுத்தப்ப பக்தனுக்கருள் செய்தாய்
மிக்க சரியை கிரியை த் தொண்டு செய்ய நீ உகந்தாய்
சரணம்
இரவு பகலாய் பக்தன் ராமலிங்க தொண்டு செய்தான்
பரவிடும் பக்தி கண்டே பாலித்தருள் புரிந்தாய்
அரவு மதிநதி யும் அணிந்து காட்சியும் தந்தா ய்
பு ர ப்பாணவிடை பூங்குடிச்சிவக்கொழுந்தே
பூவில் பாணாவிடை தேவி பர்வதவர்த்தனி
மேவி விடை மீதினிலே வீதி வளம் வந்தாய் நாதா
நாவில் உன்னை போற்றிப் பாடும் நாமன் மாத்தியாபரணன்
ஆவியுறுகித் தொழ ஆனந்த நிலையளித்தாய்
----------------------------------------------------------------------------------------------
அற்புதம் காட் டி எமை ஆட்க்கொள்கிறான்
ராகம் பாகேஸ்ரீ தளம் ஆதி
பல்லவி
அற்புதம் காட்டி எமை ஆட்க்கொள்கிறான் -தெய்வ
பொ ற்புறு பாணாவிடைப்புர ராமலிங்கேஸ்வரன்
அனுபல்லவி
சிற்பரன் தற்பரன் சிவராமலிங்கேஸ்வரன்
நற்புகழ் பெற்றிடும் நற்றவ பூங்குடியில்
சரணம்
மன்னிடும் கோயிலிலே மகேஸ்வரபூசை செய்ய
வன்ன வைகைறையிலே வடித்துப்படைத்த சாத
அன்னம் ஆவி பறந்து ஆதித்தன் மறைந்த பின்னும்
இன்னமுதாய ஆறாது இருக்கும் அதிசயமாம்
உப்புக்கடலருகே உவந்து நன்னீர் கரந்தே
எப்போதும் நல்கிடுவான் ஏந்தல் ராமலிங்கநாதன்
இப்புவியில் பாணாவிடை இலங்கு பூங்குடியில்
அப்பன் ராமலிங்கேஸ்வரன் அனைவரும் வியக்கும் வண்ணம்
-------------------------------------------------------------------------------------
பூவடி பூசை செய்வாய்
ராகம் பெலஹரி தாளம் ஆதி
பல்லவி ராமலிங்கம் இருக்க பூமலர் பூங்குடியிருக்க
நாமப்பாணாவிடை இருக்க நலிவுமுண்டோ மனமே
அனுபல்லவி
பாமாலை அரசன் மகள் பர்வதவர்த்தனி இருக்கும்
பூவுலகில் எமக்கு பொல்லாவினைகள் உண்டோ
சரணம்
பாவக்கடல் கடக்க பாணா விடை சிவனருள்வான்
தேவன் ராமலிங்கேஸ்வரன் திருவருள் புரிந்திடுவான்
ஆவலாய் பாணாவிடைக் கோயில் வளம் வருவாய்
பூவடி பூசை செய்வாய் புவியில் இன்பம் தருவான்
கண்ணப்பனுக்கிரங்கி கருணையும் புரிந்தவன்
வண்ணப்பத்தி பாணாவிடை வந்து கோயில் கொண்டவன்
பெண்ணை இடம் அனைத்தவன் பேரின்பம் தந்திடுவான்
எண்ணமிருத்தி என்றும் எழில் கழல் அடித்துதிப் பாய்
No comments:
Post a Comment