Friday, 14 June 2024

சிவன் மற்றும் அம்மன் கோயில் அமைப்பின் விளக்கம்

 

சிவன் மற்றும் அம்மன் கோயில் அமைப்பின் விளக்கம்




உடலை கோயில் என்றும் உயிரை தெய்வம் என்றும் சொன்னார்கள்.உயிரின் உருவத்தை புரிய வைக்க பெண் வடிவத்தில் காட்டினார்கள்.உயிரும் உடலும் சேர்ந்து உள்ளது என்பதை ஆணும் பெண்ணும் சேர்ந்த அமைப்பாக காட்டினார்கள் (எ.கா) சிவனும் சக்தியும் இணைந்த அமைப்பாக காட்டினார்கள்.

ஆணின் உடல் அமைப்பை சிவன் கோயில் என்றும் பெண்ணின் உடல் அமைப்பை அம்மன் கோயில் என்றும் கோயில் கட்டினார்கள். இதை படிக்கும்போது மனித இனத்தில் மட்டுமே ஆண் பெண் இருப்பதாக நினைக்கக்கூடாது. சிறிய அணுவை உடைத்தால் கிடைக்கும் சிறிய உயிர் முதல், காற்றை உடைத்தால் கிடைக்கும் சிறிய மூலக்கூறுகள் முதல், நமது உடலாக மற்றும் உடலில் உள்ள செல்கள், நாம், செடி, கோடி, புழு, பூச்சி, விலங்குகள், தாவரங்கள் வாழ்வது பூமியில், பூமி சூரியன் சந்திரன் வாழ்வது அகாண்டத்தில், அகாண்டம் வாழ்வது அடுத்த அடுக்கு (பெயர் தெரியவில்லை ) இப்படி ஏழாவது அடுக்கான பெரிய உடல் (இதுவே பரமசிவன்) அனைத்துமே ஆண் பெண் கூட்டுத்தொகுப்பே. புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
   சரி உடலுக்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பை இப்போது பார்க்கலாம்.

வினாயகர் – மூக்கு:

உடலில் வாய்க்கு முன்னாடி மூக்கு இருக்கும் அதேபோல் கோயிலில் நுழை வாயிலின் முன்பு பிள்ளையார் இருக்கும்.சிவனின் பிள்ளை என்பதால் மறியாதையாக பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது.வடக்கே தலை வைத்து தூங்கக்கூடாது (தூங்கினால் நிம்மதி இருக்காது) என்பதை மக்களுக்கு உணர்த்த யானை தலை வைத்து கதை கட்டினார்கள்.
சரியை மற்றும் கிரியை நிலையில் உள்ளவர்கள் கோயிலுக்கு சென்று விநாயகரை முறைப்படி வழிபடவும். யோகம் மற்றும் ஞான நிலையை அடைந்தவர்கள் மூக்கு நுனியை இரண்டு கண்களாலும் பார்க்கவும், மூக்கு முழுமையாக மறைந்தவுடன் (கரைந்தவுடன்) கண்களை மூடி ஆக்கினை சக்கரத்தை (தீபச்சுடரை ) பார்க்கவும். இப்போது ஞானம் கிடைக்கத்தொடங்கிவிடும்.
மண் பிள்ளையார் செய்து அதை கரைப்பதால் ஞானம் கிடைக்காது. சதுர்த்தி திதி ஞானம் பெறுவதற்கு முயற்சிக்க சிறந்த திதி ஆகும். புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


கொடி மரம் - நடு எலும்பு :
மனிதனின் நடு எலும்பு ௩௩ (33) கணுக்களை கொண்டது. அதனால் கொடிமரமும் ௩௩(33) கணுக்களை கொண்டிருக்கும். குண்டலினி சக்தி (விந்து ) நடு எலும்பு வழியாக உச்சந்தலையிலிருந்து மூலாதார சக்கரத்தை அடையும். அதை மீண்டும் உச்சந்தலைக்கு நடு எலும்பு வழியாக ஏற்றவேண்டும். அவ்வாறு ஏற்றினால் அவர்தான் முனிவர், சித்தர், ஞானி, இருடி, ஐயர், தவசீலன், தவோபதி, சான்றோன், ஆன்றோன். அவரது சக்தியும் புகழும் கொடிகட்டி பறக்கும்.

நந்தி – கண்டம்:

வாய்க்கு பிறகு ஆண்களுக்கு கண்டம் (தொண்டையில்) இருக்கும்.கோயிலில் நந்தி இருக்கும்.நந்தீஸ்வரன் மனித வடிவில் இருந்தவர்தான்.இவர் சிவனின் முதல் சீடன்.இவரை சிவன் தனது உயிருக்கு நிகராக மதித்தார் மனித இனம் எப்பொழுது அழியும் என்றால் மாட்டு இனம் அழியும் போது மனித இனம் தானாகவே அழியும்.மாட்டு சானத்தை பயன்படுத்திதான் விவசாயம் செய்ய முடியும், மருந்து போட்டு பயிர் செய்தால் மண் வளம் அழியும் அதோடு மனித வளமும் அழியும்.மனிதனின் கண்டத்தை நெரித்தால் இறந்துவிடுவான் அதுபோல் மாட்டை அழித்தால் மனித இனமே அழியும்.இதை புரிய வைக்க நந்தி மாடு வடிவில் வைக்கப்பட்டுள்ளது.ஆணாக இருப்பதால் காளை மாடு வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.காளை மாடு பசு மாடு என்று வேறுபடுத்த வேண்டாம்.இரண்டும் இருந்தால்தான் இனம் தழைக்கும்.


பெண் உடல் அமைப்பில் கண்டம் இல்லை அதனால் அம்மன் கோயிலில் நந்தி இருக்காது.
ஆயிரம் கால் மண்டபம் - எலும்பு மண்டலம் நரம்பு மண்டலம்:
எலும்பு மண்டலம் நரம்பு மண்டலம் உள்ளதை புரிய வைக்க ஆயிரம் கால் மண்டபம்.
சீரண மண்டலம்:
வேக வைத்தோ அல்லது வேக வைக்காமலோ, நாம் சாப்பிட்ட உணவிற்கு ஜீரண மண்டலத்தை கடந்த பின் உயிர் பெற்று வெவ்வேறு வகையான உயிரினமாக (எ.கா. சக்கரை, கொழுப்பு, கால்சியம்) வந்துவிடுகிறது பின்பு இரத்தத்தின் மூலம் அனைத்து உறுப்புகலுக்கும் செல்கிறது. நம் உடலில் உள்ள செல்கள் அவற்றை பிடித்து சாப்பிடுகின்றன.வெளி உலகில் ஒரு இனம் மற்றொரு இனத்தை சாப்பிட்டு வாழ்கின்றன (தாவரத்தை மனிதன், விலங்குகள், பறவைகள் சாப்பிடுவதை போல).நம் உடலில் உள்ள செல்களும் இனப்பெருக்கம் செய்கின்றன, தினமும் பிறப்பதும் இறப்பதும் நடந்து கொண்டே இருக்கின்றன.இதையே அண்டமெல்லாம் பிண்டத்துக்குள் அடக்கம் என்றார்கள்.இது தெளிவாக புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு உடலும் ஒரு உலகம் என்பது புரியும்.இதை புரிய வைக்கும் விதமாக கோயில் கோபுரத்தில் அனைத்து விதமான சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் - தேவர்கள்:
ஆண் செல் தேவன் பெண் செல் தேவி அல்லது தேவதை.இரண்டு செல்களும் சேர்ந்து குட்டி போட்டு குட்டி போட்டு உடல் உறுப்புகள் அனைத்தும் உருவானது.இப்படி ஒரே இனம் மீண்டும் மீண்டும் சேரும்போது வேறு வேறு உறுப்புகள் உருவானதுஅல்லவா.இந்த காரணத்தினால்தான் மனிதனை ஒரே உறவுக்குள் திருமணம் செய்யக்கூடாது என்றார்கள் (எ.கா. அண்ணனும் தங்கையும்).ஒரு சராசரி மனிதனின் உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை முப்பது முக்கோடி (மூன்றுக்கு அருகில் இருபத்தி இரண்டு ஜீரோ சேர்த்தால் அதற்கு முப்பது முக்கோடி – 30000000000000000000000 - தமிழில்). இதையே முப்பது முக்கோடி தேவர்கள் நம்மை காப்பதாக சொல்வார்கள் ( செல்கள் கூட்டாக இருப்பதால்தான் உடல் உடலாக உள்ளது). இதை புரிய வைக்க கோபுரம் முழுவதும் சிலைகளால் அமைக்கப்பட்டிருக்கும்.இந்த தேவர்களுக்கு (செல்களுக்கு) கெடுதல் செய்யும் கிருமிகளை அசுரர்கள் என்பர்.
இது ஆபாசம் அல்ல அனைத்து உயிரினத்தின் உடல்களும் இவ்வாறு அமைத்துள்ளது என்பதை புரியவைப்பது. செல்கள் இனப்பெருக்கம் செய்துகொண்டே இருப்பதால்தான் உடல் நிலைபெற்று இருக்கிறது.
 
அர்த்த நாரி:
 அர்த்த என்றால் பாதி, நாரி என்றால் பெண். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எந்த உடலாக இருந்தாலும் பாதி ஆண் செல்களும் பாதி பெண் செல்களாலும் உடல் அமைக்கப்பட்டுள்ளது. எல்லா உடலும் சிவம் எல்லா உயிரும் சக்தி இதுவே நம் முன்னோர்களின் வழிபாட்டுமுறை.
இதைத்தான் சிவன் தனது உடலில் பாதியை பார்வதிக்கு கொடுத்ததாக சொல்வார்கள். புரியவைப்பது சற்று கடினம்தான் புரிந்தால்தான் ஞானம்.
ஐந்து கோபுரங்கள் - இறைவன்:
பஞ்ச பூதங்களே  இறைவன் என்றழைக்கப்படுகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இதில் நிலம் என்பது நாம் சாப்பிடும் சாப்பாடு, ஆகாயம் என்பது பிரானன் அல்லது உயிர்.இதை உணர்த்தும் விதமாக ஐந்து கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.தனித்தனி கோபுரம் அமைக்க வசதி இல்லாதவர்கள் ஒரு நடு கோபுரத்தின் நான்கு புரமும் சிறு சிறு கோபுரம் அல்லது ஆர்ச் அமைப்பார்கள்.ஆதி மனிதர்கள் இயற்கையை இறைவனாக வழிப்பட்டதாக படித்தோம்.ஆதி மனிதன் மட்டுமல்ல இந்த கால மனிதனும் அதைத்தான் வழிபடுகிறோம். பஞ்ச பூத கோயில்கள் நிலம் - காஞ்சிபுரம், நீர் - திருவாணைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை, காற்று – விருத்தாசலம்&காலகஸ்தி, ஆகாயம் – சிதம்பரம்.
 
சிவனெண்குணத்தின் பெயர் – பிங்கல நிகண்டு 
 
1.         பவமின்மை – பிறப்பின்மை.
2.         இறவின்மை – இறப்பின்மை.
3.         பற்றின்மை – எந்த ஒரு பற்றுதலும் இல்லை.

4.         பெயரின்மை – இதுதான் பெயர் என்று இல்லை.
5.         உவமையின்மை – உவமையாக எதனுடனும் ஒப்பிட முடியாது.
6.         ஒருவினையின்மை – எந்த வினையும் இல்லை ( புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை).
7.         குறைவிலறிவுடைமை – குறையாத அறிவுடைமை (நிறைந்த அறிவுடைமை).
8.         கோத்திரமின்மை – இந்த தெய்வத்தை வணங்குகிறார் என்று சொல்ல இயலாமை.
மூல ஆதார சக்கரம்:
சிவன் கோயிலில் ஐந்தாவது கோபுரமான நடு கோபுரத்தில் மூல ஆதார சக்கரம் அமைக்கப்பட்டிருக்கும்.ஆண்களுக்கு நடு எலும்பு முடியும் இடத்தில் மூல ஆதார சக்கரம் இருக்கும்.அங்குதான் விந்து உற்பத்தி ஆகுகின்றது.விந்துவிற்கு வேறு சில பெயர்களும் உண்டு அவை தெய்வம், உயிர், குண்டலினி, வித்து, பாம்பு, சர்ப்பம், பூரனம், சக்தி, இந்திரியம், இந்திரன்.இது பிறக்கும்போது உச்சந்தலையில் (துரிதம்) இருக்கும், நாம் வளர வளர கீழ்நோக்கி இறங்கி மூல ஆதார சக்கரத்தை அடையும்போது விடலைப்பருவம் (இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலை).ஆண்கள்ஆண்களுக்கு உயிர் இருக்கும் இடமான மூல ஆதார சக்கரத்தை பூசை செய்யவேண்டும்.
 
விஷ்ணு துர்க்கை:
 
விஷ்ணு துர்க்கை என்பது கர்ப்பிணி பெண்ணை குறிப்பது. இது மூல ஆதாரசக்கரத்திற்கு நேர் வெளியில் இருக்கும். அதாவது  மூல ஆதாரத்திலிருந்து பெண்ணின் கருவறைக்கு சென்ற விந்து குழந்தையாக உருவாகும்.
விந்து பெண்ணின் கருவறைக்கு சென்றால் குழந்தை, உச்சந்தலைக்கு சென்றால் ஞானம்
விஷ்ணு : பாற்கடலில் பள்ளிகொண்டார் விஷ்ணு அதாவது குழந்தை நீர்க்குடத்தில் இருப்பதை குறிக்கும் மேலும் ஐந்து மடங்கு சக்தியுடன் இருப்பதை குறிக்க ஐந்து தலை நாகம் அமைக்கப்பட்டிருக்கும்.
உச்சந்தலையில் குண்டலினி உள்ளதை காட்டவும் தலையின் மேல் ஐந்து தலை பாம்பு இருப்பதை போல் அமைப்பார்கள். அதாவது ஐந்து மடங்கு ஞானம் உள்ளதை காட்ட இவ்வாறு அமைப்பர்
 


வேண்டுகோள்:
 
சிவலிங்கம் என்ற வார்த்தையை தவிர்த்து மூலவர் என்று அழைக்கும்படி அனைவரயும் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்றால் லிங்கம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஆணுறுப்பு என்று அர்த்தம். சிலர் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சேர்ந்த அமைப்பு என்று தவறாக கூறுகிறார்கள். நாம் மூல ஆதார சக்கரத்தை பூசை செய்கிறோம் லிங்கத்தை அல்ல என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளவும். சிலர் இந்திய கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்ப நினைத்து ஆணுறுப்புக்கு பெண்ணுறுப்பும் சேர்ந்த அமைப்பு லிங்கம் என்று ஆங்கில சினிமா எடுத்து உலகெங்கும் பரப்பி உள்ளார்கள். இதுபோன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை நீக்கி உண்மையை பரப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  கருவரை:
அம்மன் கோயிலில்ஐந்தாவதுகோபுரமானநடுகோபுரத்தில்கருவரைஅமைக்கப்பட்டிருக்கும் அங்கு ஒரு சின்ன சிலையை வைத்து பூசை செய்வார்கள்.பெண்களுக்கு அடி வயிற்றில் கருவரை இருக்கும் அங்குதான் கரு வளரும்.பெண்கள் தன்னுள் இருக்கும் கருவரையை பூசை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதே போல் எந்த எண்ணத்தில் பூசிக்கிறார்களோ அதே மாதிரியான குழந்தை பிறக்கும்.ஓவரியில் வித்து அல்லது கருமுட்டை உற்பத்தி ஆகுகின்றது. வித்துவிற்கு வேறு சில பெயர்களும் உண்டு அவை தெய்வம், உயிர், குண்டலினி, பாம்பு, சர்ப்பம், பூரனம், சக்தி, இந்திரியம், இந்திரன்.இது பிறக்கும்போது உச்சந்தலையில் (துரிதம்) இருக்கும், நாம் வளர வளர கீழ்நோக்கி இறங்கி கருவரையை அடையும்போது விடலைப்பருவம் (இனப்பெருக்கத்திற்கு தயாரான நிலை).பெண்கள் தன்னுடைய கருவரையை பூசை செய்யவேண்டும்.
நவக்கிரகங்கள்:
     நமக்கு வரும் இன்பம், துன்பம், உடல் உபாதைகள் போன்ற அனைத்தும் நவக்கிரகங்களால் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை புரியவைக்கிறது.
தெளிவு : ஆண்கள் பூசிக்கவேண்டியது மூல ஆதார சக்கரம், பெண்கள் பூசிக்கவேண்டியது கருவரை.அவரவர் உயிர் இருக்கும் இடத்தில் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
பூசை என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல் என்று அர்த்தம்.
அபிஷேகம்:
அபிஷேகம் என்பது சமஸ்கிருத வார்த்தை.இதற்கு அர்த்தம் அபி என்றால் இப்போ, ஷேகம் என்றால் உண்மை.அதாவது உண்மையை உணருங்கள் என்று அர்த்தம்.அதாவது நாம் உண்ட உணவு பலநிலைகளை கடந்து கடைசியாக வித்துவாக மாறுகிறது.ஆண் உடலில் நடு எலும்பு வழியாக சென்று மூல ஆதார சக்கரத்தில் வித்துவாக மாறுகிறது. பெண்  உடலில் ஓவரியில் வித்துவாக மாறி பின்பு கருவரையை அடைகிறது. இதை செய்முறை(Demo) செய்து காட்டுவதுதான்அபிஷேகம்.
பிறர் சாதம் (பிரசாதம்):
ஐந்து லிட்டர் அல்லது பத்து லிட்டர் பால் கொண்டு சென்றால் அதில் சிறிது பாலை மூல ஆதார சக்கரத்தில் அல்லது கருவரையில் இருக்கும் கருவில் ஊற்றி சிவன் அல்லது அம்மன் வாய் வழியாக சென்ற உணவு கடைசியாக எங்கே செல்கிறது என்பதை உணருங்கள் அதேபோல் நாம் உண்ட உணவு நம் உடலிலும் கடைசியாக தெய்வமாக, சக்தியாக, வித்துவாக, குண்டலினியாக, உயிராக, பாம்புவாக மாறுகிறது என்பதை உணர்த்திவிட்டு மீதம் உள்ள பாலை பிறருக்கு கொடுக்க வேண்டும். இதற்கு பிறர் சாதம் என்று பெயர். ஐந்து லிட்டர் அல்லது பத்து லிட்டர் பாலை முழுவதுமாக அங்கு ஊற்றுவது அறியாமையாகும்.
பிரசாதம் என்ற பெயரில் வியாபாரம் செய்வதும் அறியாமையே.
ஆகம விதி:
ஆகமம் என்றால் அடைதல். உண்ட உணவு உயிர் பெற்று அடுத்த நிலையை அடைவது. மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆண் அல்லது பெண் உடல் உள் அமைப்புப்படி கோயில் கட்டினால் அதுவே ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில் ஆகும் எ.கா சிவன் கோயில், அம்மன் கோயில்.இதுவே மிக பழமையான நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்ட முறை ஆகும்.
கோயிலின் உள்புறம் ஒரு ஆள் இருப்பதாக கொண்ட கோயில்கள் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை அல்ல எ.கா வினாயகர் கோயில் முருகன் கோயில், ராமர் கோயில், கிருஷ்ணர் கோயில்.இதுபோல் கோயில் கட்டும் பழக்கம் ஆரியர்கள் வருகைக்கு பின் வந்தவையே. இக்கோயில்களில் உள்ளே இருக்கும் சிலையை உர்ச்சவர் என்பர்.
 
கோயில் குடமுழக்கு விழா:
பெண்ணின் கருவரையில் உள்ள ஒரு குழந்தை முழு வளர்ச்சி (கோயில் கட்டி முடிக்கப்பட்டது) அடைந்ததும் நீர் குடத்தை உடைத்துக்கொண்டு வெளிவரும்.இதற்குதான் குடமுழக்கு என்று பெயர்.இதைத்தான் கோயிலின் உச்சியில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி உணரச்செய்வார்கள்.கருவரையில் உள்ள நீர் குடத்தின் நீர் குழந்தைக்கு பாதுகாப்பை கொடுக்கக்கூடியது.
மண்டலப்பூசை:
பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனது எண்ணமும் ஆசையும் நிறைவேற 48 நாட்கள் மனதை ஒருநிலைப்படுத்தி வணங்க வேண்டும்.இதற்குதான் மண்டலப்பூசை என்று பெயர்.மண்டலம் என்றால் 48 நாட்கள், பூசை என்றால் மனதை ஒருநிலைப்படுத்துதல்.
யாக சாலை அல்லது யாக குண்டம்:
யாக சாலை அல்லது யாக குண்டம் என்பது நமது வயிறு.இங்கு போடப்படும் உணவுகள் உயிர் பெற்றுவிடுகின்றன.அதனால் நம் உடல் (கோயில்) சக்திப்பெற்று சிறப்பாக செயல்படுகிறது.
எ.கா.விலாம் பழம் – அறுசுவை கொண்டது, மிகச்சிறந்த உணவு.இதை தீயில் போடக்கூடாது சாப்பிடவேண்டும்.
கும்பாபிஷேகம்:
கும்பாபிஷேகம் என்பது சமஸ்கிருத வார்த்தை.இது அகம விதி மீறி கட்டப்பட்ட கோயில்களின் திறப்பு விழாவின்போது சொல்லப்படும் வார்த்தை.அதாவது கும்பம் என்றால் புகழ், அபி என்றால் இப்போ, ஷேகம் என்றால் உண்மை.அதாவது இப்போது இறைவனின் புகழை உணருங்கள் என்று அர்த்தம்.






 
 
 
 
 
 

No comments:

Post a Comment