Friday, 14 June 2024

கோவில் அமைப்பு முறை

 

கோவில் அமைப்பு முறை
💥💥💥💥💥💥💥💥💥
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’
என்பது திருமூலர் அருட்பாடல்
அவர் உடலே கோயில் என்றார்.
-
உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை *க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்* என்கிறது ஆகமச் சொற்றொடர்.
உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும்,
முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும்,
தொடை நிருத்த மண்டபமாகவும்,
கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும்,
மார்பு மகாமண்டபமாகவும்,
கழுத்து அர்த்த மண்டபமாகவும்,
சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய்
எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
-
கோயில் அமைப்பில், உடலில்
அன்னமய கோசம்,
பிரணமய கோசம்,
மனோமய கோசம்,
விஞ்ஞானமய கோசம்,
ஆனந்த மய கோசம் ஆகிய 5 உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
-
தூல சரீரம்,
சூட்சும சரீரம்,
குண சரீரம்,
அஞ்சுக சரீரம்,
காரண சரீரம் போல 5 சபைகள் உள்ளன.
-
உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.
கருவறை சிரமெனப்பட்டது.
அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி,
இடச்செவி சண்டிகேசுவரர்,
புருவமத்தி லிங்கம்,
மூக்கு ஸ்தபந மண்டபம்,
வாய் ஸ்தபந மண்டப வாசல்,
கழுத்து நந்தி
தலையின் உச்சி விமானம்
என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.
-
ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
மேலும் நம் உடல்
தோல்,
இரத்தம்,
நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும்
செங்கல்,
காரை,
கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது.
-
முக்கிய அங்கம் :
பொதுவாக கோவில் என்று சொன்னாலே அங்கே மூன்று முக்கிய அங்கங்கள் இருக்க வேண்டும்.
அவை ஸ்தலம், தீர்த்தம்,விருட்சம். ஸ்தலம் என்றால் மூலவர். மூலவர் இருக்கும் இடத்தை ஸ்தலம் என்பார்கள். அடுத்ததாக கோவிலில் இருக்கக்கூடிய குளம் தீர்த்தம் எனப்படும்.
-
விருட்சம் எனப்படுவது ஒவ்வொரு கோவிலுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தெய்வங்களின் சக்தியை இந்த விருட்சமே தாங்கி நிற்கின்றன. ஸ்தல விருட்சமாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரம் இருக்கும். கும்பாபிஷேகத்தின் போது அந்த ஸ்தல விருட்சத்தின் அடிமண்ணை எடுத்து வந்தே கும்பாபிஷேகம் யாகம் செய்வார்கள்.
-
கோவில் கட்டி தெய்வ வழிபாட்டை ஊக்குவித்த பெருமை மன்னர்களையே சாறும். கோவில் கட்ட எண்ணற்ற உதவிகளை செய்து, இறை வழிபாட்டை ஊக்குவித்திருக்கிறார்கள். கி.மு ஆயிரம் காலத்திலிருந்த மன்னர்கள் பெரும்பாலும் செங்கற்களால் கோவிலை கட்டினார்கள். இவற்றை ஏழு வகைகளாக பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து அதன் பிறகு எந்த மாற்றங்களும் பெரிதாக ஏற்படவில்லை.
-
பல்லவர்கள் காலத்தில் தான் குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்டன. பெரும்பாலும் இந்த குடைவரைகளில் கடவுளின் சிலை இருக்காது, இப்படி பல குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்ட பிறகு தான் கடவுள் சிலை வைக்கப்பட்டது.
பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் கட்டத்துவங்கிய குடைவரைக் கோவில்கள் கோவில் கட்டிடக்கலையின் மைல்கல் என்றே சொல்லலாம்.
- :
சோழர்களின் காலம் கோவில்களின் பொற்காலம் என்று சொல்லலாம். இந்தக் காலத்தில் கோவில் கட்டிட அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் உண்டானது. பிம்மாண்டமாகவும் கலைநுணுக்கங்களுடனும் சோழர்கள் காலத்தில் பல்வேறு கோவில்கள் எழுப்பப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கட்டிய கோவில்களில் இன்றளவும் பூஜைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
-
பாண்டியர்கள் காலத்தில் கோபுரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் காலத்தில் கோவில் சீரமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல கோயில்கள் மீட்டெடுக்கப்படன.
-
மனித உடல் :
-
பொதுவாக கோவிலின் அமைப்பு மனித உடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு மனிதன் மல்லாந்து படுத்திருந்தால் அவனது பாதம் மேல்நோக்கி இருக்கும். அது போலவே கோபுரம் உயர்ந்திருக்கும். கொடி மரம் மனிதனி முதுகுத் தண்டுக்கு ஒப்பானது. வாயிலில் இருக்ககூடிய துவார பாலகர் நம் தோள்களைக் குறிக்கிறது.
அதைத் தாண்டி இருக்கக்கூடிய மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் மனிதனின் உடல் போன்றது. கருவறை தான் தலை.
-
கருவறை :
-
கருவறையில் மூலவர் வீற்றிருப்பார். எட்டு எட்டாக அறுபத்து நான்கு சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். கருவறையின் பின் சுவர் முதல் மையம் வரையில் பத்து பாகங்களாக பிரித்திருப்பர். பத்தாம் பாகத்தில் சிவன், ஒன்பதாம் இடத்தில் பிரம்மா, எட்டாம் இடத்தில் விஷ்ணு, ஏழாம் இடத்தில் முருகன், ஆறாம் இடத்தில் லட்சுமி அல்லது சரஸ்வதி, ஐந்தாம் இடத்தில் பிற பெண் தெய்வங்கள்,நான்காவது இடத்தில் விநாயகர்,மூன்றாவது இடத்தில் பைரவர்,இரண்டாவது இடத்தில் துர்க்கை ஆகிய சிலைகள் அல்லது உருவங்கள் இருக்கும்.
-
பகுதிகள் :
-
கருவரையில் இருக்கும் கீழ் பகுதியை அதிட்டானம் என்று சொல்வார்கள். இதில் அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கும், அடுத்தபடியாக கர்ப்பக கிரகத்தை தாங்கி நிற்கும் சுவற்றை பிட்டி என்பார்கள். இதில் இருக்கக்கூடிய வாயில் தேவ கோட்டம் எனப்படும். இந்த வாயிலில் தட்சன்,துர்க்கை,நரசிம்மன் போன்ற தெய்வங்கள் இடம்பெற்றிருக்கும்.
-
கருவரையின் கூரை பிரஸ்தனம்.அங்கே யாளி உட்பட பூதங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் கர்ப்ப கிரகத்தில் இருக்கக்கூடிய மூலவரின் வாகனம் பிரஸ்தனத்தில் இடம்பெற்றிருக்கும்.
-
இந்த பிரஸ்தனத்திற்கு மேல் உள்ள பகுதியை க்ரீவம் என்பார்கள். இது பெரும்பாலும் சதுர வடிவில் இருக்கும். அதற்கு மேல் தான் கும்பம் அல்லது கலசம் இருக்கும்.
-
கருவறை தேர்ந்தெடுப்பது :
-
கருவறையை இங்கே தான் கட்டவேண்டும் என்று பல்வேறு விதமான நுட்பங்களை பார்த்து தான் தீர்மானிக்கிறார்கள். பஞ்ச பூதங்களின் சக்தி, கடவுள் அருள்,வானியல் கதிர்வீச்சு ஆகியவை எல்லாம் சேர்ந்து மிகுந்திருக்கும் இடத்தில் தான் கருவறை கட்ட தேர்ந்தெடுக்கப்படும்.
கருவறை அமையும் பகுதி சதுரம்,வட்டம் மற்றும் முக்கோணம் ஆகிய மூன்ற வித அமைப்புகளுடையதாய் இருக்கும். சதுர அமைப்பு தேவ உலகத்தையும், வட்டம் இறந்தவர்களையும், முக்கோணம் மண்ணுலகத்தையும் குறிக்கிறது. தமிழ்நட்டில் முக்கோண அமைப்பில் கோவில்கள் இல்லை.
-
தானியங்கள் :
-
இது தான் இடம் என்று தீர்மானித்தபிறகு அதனை உறுதி செய்த பிறகு தான் கட்டிட வேலையையே ஆரம்பிக்கிறார்கள். அந்த இடத்தில் தானியங்களை விதைக்கிறார்கள். மூன்று நாட்களுக்குள் முளைத்துவிட்டால் அது உத்தமம் என்றும், ஐந்து நாட்களில் என்றால் மத்திமம் என்றும் ஐந்து நாட்களைக் கடந்து விட்டால் அதமம் என்று குறிப்பிடுகிறார்கள்.
-
இருட்டறை :
-
பெரும்பாலான கருவறை இருட்டாகவே இருக்கும். அன்னையின் வயிற்றில் குழந்தை இருட்டறையில் இருப்பதை நியாபகப்படுத்துகிறது.யோகிகள் இருட்டளையிலேயே தியானம் பழகுகிறார்கள்.பஞ்ச பூதங்களும் ஆதிக்கம் செலுத்த முடியாத இடம் இருளாகவே இருக்கும்.
கருவறையில் உள்ள விக்கிரகத்திற்கு திபாராதனை காட்டப்படும்போது மனம் முழுவதும் அவரிடமே குவிக்கப்படவேண்டும்.வேறு இடங்களில் மனம் செல்லக்கூடாது.
ஆராத்தி காட்டும் பூஜாரியின் முகம்கூட தெரியக்கூடாது.
ஒருமுறை விக்கிரகத்தை கண்ணால் கண்டபிறகு அப்படியே மனதில் அவரை தியானிக்க வேண்டும்.
இறைவனை மனதில் எழுந்தருளச்செய்ய வேண்டும்.
இறைவன் நமக்குள்ளேதான் காட்சி தருகிறார்.
-
அணையா விளக்கு :
-
எல்லா கோவில் கருவரையிலும் அணையா விளக்கு ஒன்று எரிந்து கொண்டேயிருக்கும். இவை அறையில் நிரம்பியிருக்கும் ஆற்றலை வெளியே உந்தித்தள்ள வைத்திடும். இதே போல கருவறைக்குள் இருக்கக்கூடிய ஆற்றல் இடமிருந்து வலமாக சுற்றுவதாக இப்போதைய ஆரய்ச்சியாளர்கள் கணித்துச் சொல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடவுளை இடமிருந்து வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
-
கருங்கல் :
-
பெரும்பாலான கோவில்களின் மூலவர் சிலைகள் கருங்கல்லில் தான் செதுக்கப்பட்டிருக்கும். இதற்கு காரணம், பிற உலோகங்களை விட கருங்கல்லில் பல மடங்கு ஆற்றல் இருக்கும். அதை விட கல்லுக்கு எந்த ஆற்றலையும் தன் வசம் ஈர்த்துக் கொள்ளக்கூடியது. அதே போல கருங்கல்லில் பஞ்ச பூத ஆற்றல்களும் அடங்கியிருக்கிறது. இந்த திறன் வேறு எந்த உலோகத்திலும் இல்லை.
-
ஆற்றல் :
-
நல்லவர்கள் பலர் கோவிலுக்கு வரும்போது கோவிலில் புனிதம் பெருகுகிறது.இதனால் அங்கு ஆன்மீக சூழல் உருவாகிறது.அதே நேரம் கோவிலுக்கு தீயவர்கள் அதிகம் வந்தால் கோவிலின் புனிதம் கெடுகிறது.அங்கிருக்கும் ஆற்றல் அழிந்துபோகிறது.
முற்காலத்தில் கோவிலில் சித்தர்கள் தவம் செய்வதற்கென்று தனியான இடங்கள் இருக்கும்.அவரது ஆன்மீக சக்தி கோவில் முழுவதும் நிறைந்திருக்கும்.
சில கோவில்களுக்கு மகான்கள் அடிக்கடி சென்று தரிசிப்பார்கள்.இறைவன்மீது பாடல்கள் பாடுவார்கள்.அவர்கள் வருகையால் கோவில் புனிதமடையும்.
சில கோவில்களில் தெய்வங்கள் சூட்சும வடிவில் நிலைபெற்றிருக்கும்.
-
சுவாமி விவேகானந்தர், இராமேஸ்வரம் கோவிலில் 27-1-1897 அன்று சொற்பொழிவாற்றினார். அவரது உரையில் இருந்து கொஞ்சம் இங்கே தொகுத்து தரப்பட்டு உள்ளது.
-
* அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும் தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை.
* ஒருவன் உடலும், மனமும் தூய்மையாக இல்லாமல், கோவிலுக்கு செல்வதும், வழிபடுவதும் பயனற்றவை.
* உடலும், மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்து கொண்டு, பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள்.
* புற வழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும், தூய்மையும் தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றி செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
* ‘நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பிறகு ஒரு திருத் தலத்திற்கு சென்றால், அந்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று நினைக்கும் அளவிற்கு கீழான நிலைக்கு இந்த கலியுகத்தில் மக்கள் வந்து விட்டார்கள்.
* தூய்மையற்ற உள்ளத்துடன் கோவிலுக்கு செல்லும் ஒருவன், ஏற்கனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான். கோவிலுக்கு புறப்பட்டபோது இருந்ததை விட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.
* திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும், மகான்களாலும் நிரம்பி இருப்பவை.
* மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோவில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள் தான்.
* 100 கோவில்கள் இருந்தாலும் அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்வீகம் மறைந்து விடும்.
* திருத்தலங்களில் வாழ்வது மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களை சுலபமாக நீக்கி கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது.
* மனதை தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.
* ஏழை-எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனை காண்பவன் தான் உண்மையாக கடவுளை வழிபடுகிறான். விக்ரகத்தில் மட்டும் தெய்வத்தை காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.
-
*ஓம் நமசிவாய*🙏🙏🙏
Keine Fotobeschreibung verfügbar.
Alle Reaktionen:
21

No comments:

Post a Comment