திரு ஊஞ்சல்
---------------பொன்னிலங்கு ஈழ த்து ராமேஸ்வரப்பூங்குடியின்
பா ணாவிடைத்தலத்தில் மேவும்
அன்னை பர்வதவர்த்தனி சமேதராகி
அ ரனார் ராமலிங்கேஸ்வரர் மகிழ்ந்தே
கன்னல் தமிழ்த்திரு ஊஞ்சல் தனிிலே வைதி
கழித்தாட ஊஞ்சல் இசை பாடி ஏத்த
வன்ன மருப்பழகனான வாரணனின்
வளம் திகழும் செஞ்சரணம் காப்பதாமே
வேத நாற் பவளத் தூண் விளங்க நாட்டி
விரிந்த சிவா கமல வயிர விட்டம் பூட்டி
நாதமாம் கலை ஞானக் கயிறு மாட்டி
நளின ஓங்காரமெனும் பீடம் தேக்கு
மாதவளாம் பர்வவதர்த்தனியாளோடு
மருவு தமிழ்த்திரு ஊஞ்சல் தனிலே வைகி
இதல் நிறை பூங்குடியின் பாணாவிடை ராமலிங்கேஸ்வரரே ஆடிர் ஊஞ்சல்
அன்பொழுகும் கால் நிறுத்தி ஆத்மஜீவன்
ஐந்து புலன் விட்டமதை ஒன்றாய் சேர்த்து
இன்புற நாற்கரண வட மிழுத்தே மாட்டி
இணைந்த திருவருள் என்ற பீடம் தேக்கி
என்புருக பேரின்ப முத்தி ஊஞ்சல்
எழிலாக ஜீவனவன் ஆடலருள் செய்
இன்பதியாம் பூங்குடியின் பாணாவிடை ராமலிங்கேஸ்வரரே ஆடிர் ஊஞ்சல்
No comments:
Post a Comment